370. நந்திகிராம் vs அணுசக்தி ஒப்பந்தம் - கம்யூனிஸ்ட்களின் பல்டி
அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தீவிர எதிர்ப்பு காட்டி வந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் (சிபிஐ, சிபிஐ(M)) தற்போது தங்கள் நிலையிலிருந்து இறங்கி வந்து, இந்தியா IAEAவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளதற்குக் காரணம், நந்திகிராம் விவகாரம் என்றால் அது மிகையாகாது! நந்திகிராம் பிரச்சினையினால் சிபிஐ(M) பலதரப்பு நெருக்கடிகளை எதிர்கொண்டு, பெரும் சிக்கலில் உள்ள நிலையில், இந்த பல்டியை ஆளும் காங்கிரசுடன் செய்து கொண்ட 'பேரமாக' மட்டுமே பார்க்க இயலுகிறது. இல்லையென்றால், இவர்களின் இந்த திடீர் 'ஞானோதயத்திற்கு' வேறென்ன காரணம் இருக்க இயலும் ???
அதனால் தான் என்னவோ, நந்திகிராமில் சரியான நேரத்தில் / தேவையான நடவடிக்கைகள் எடுக்காதது குறித்து மேற்கு வங்க அரசை கவர்னர் கடுமையாக சாடிய பின் கூட, நமது பிரதமரோ, எங்கு பிரச்சினை என்றாலும் ஓடிச் சென்று விசாரிக்கும் சோனியா காந்தியோ, இந்தப் பிரச்சினையில் வாய் மூடி மௌனமாக உள்ளனர்! வேறு ஏதாவது கட்சி ஆட்சி நடத்தும் மாநிலமாக இருந்திருந்தால், மத்திய அரசு மிகக் கடுமையாக நடந்து கொண்டிருக்கும். ஏன், கவர்னர் ஆட்சியே ஏற்பட்டிருக்கலாம் !
இந்தப் பிரச்சினையில் உச்ச்க்கட்ட காமெடி என்னவென்றால், மாவோயிஸ்ட்களுடன் சேர்ந்து கொண்டு மம்தா பானர்ஜி வன்முறை செய்வதாக பிரகாஷ் கரத் திருவாய் மலர்ந்திருப்பது தான் ! பிரச்சினையை சுமுகமாக தீர்க்க ஒரு எழவும் செய்யாமல், கவர்னரின் நியாயமான பேச்சுக்கு சிபிஐ(M) கடுமையான கண்டனம் வேறு தெரிவிக்கிறது.
கம்யூனிஸ்ட்கள் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த நிலைப்பாட்டிலிருந்து மொத்தமாக பல்டி அடித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று ஏற்கனவே ஒரு <a href="http://balaji_ammu.blogspot.com/2007/08/352-123.html ">பதிவில்</a> குறிப்பிட்டிருந்தேன். அப்படி நடந்து, ஒப்பந்தம் கையெழுத்தானால், நாட்டின் மொத்த எனர்ஜி தேவையில் 5% மட்டுமே பூர்த்தி (அதுவும் 2020-இல்) செய்யக்கூடிய, விலை அதிகம் தந்து பெற வேண்டிய அணுசக்திக்காக என்ற போர்வையில், (ஒரு பிரதமரின் விருப்பத்திற்காக மட்டும்) அமெரிக்காவின் அடிவருடியாக நாம் காலம் தள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும் !
அணு ஆயுத பரிசோதனை செய்யும் நமது சுதந்திரத்திற்கும், தேசிய பாதுகாப்பு நலனுக்கும் எதிராக இருக்கும் Hyde Act பற்றிய குறிப்பு 123 ஒப்பந்தத்தில் இருக்கும் வரை, இந்த ஒப்பந்தம் நிச்சயம் ஏற்க இயலாத ஒன்று.
எ.அ.பாலா
*** 370 ***
2 மறுமொழிகள்:
Test comment !
இந்திய கம்யூனிஸ்ட்டுக்கள் சோரம்போனவர்கள் என்பதற்கு ஒரு பதிவு தேவை இல்லை. அவர்களூடைய தடுமாற்றமான கருத்துக்கள் தொடருவது அவர்களுடைய கட்சி வளர்ச்சிக்கு நல்லதல்ல. இவர்களுடைய பலவீனமான நிலையை காங்கிரஸ் சரியாக மதிப்பிட்டதால்தான் "இருந்தால் இரு விரும்பாவிட்டால் வெளியேறு" என்றார்
பிரதமர். அதுமட்டுமா?
இலங்கையில் உள்ள இனவாதத்தின் மொத்த ஏஜன்டான ஜெ.வி.பி கட்சியுடன் தோழமையை வைத்துக்கொண்டு இலங்கை தமிழர் நெருக்கடியில் அவர்கள் கூறும் கருத்துக்கள் கேலிக்கூத்தானது.
புள்ளிராஜா
Post a Comment